மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்ததானம்.

0
111

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இரத்தம் சேகரிக்கும் இரத்ததான முகாமொன்று இன்று நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலின் வழிகாட்டலில் இயங்கி வரும் ஸலாமா பௌன்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.எச்.எம். சியாம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியகாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கனேசலிங்கம்போதனா வைத்தியசாலை  இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டாக்டர். ஹர்விசாந்த் மற்றும் வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள்ஸலாமா பௌன்டேசன் அமைப்பின் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.