திருமணவிருந்து ஆரைப்பற்றை வைத்தியசாலையில் 15பேர் அனுமதி.

0
200

மட்டக்களப்பு ஆரையம்பதி கோவில்குளம் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற திருமணவீட்டில் உணவருந்திய 30 பேர்  உணவுஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 15பேர் ஆரைப்பற்றை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 15பேரும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் திருமணவீட்டுக்குச்சென்று உணவுவகைகளை பரிசோதனை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.