சப்ரிகம எனும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைப்பு

0
129
பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 5 வட்டாரங்களுக்கான வேலைத்திட்டங்கள் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக் தலைமையில் இன்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் உருவாக்கத்தின் சப்ரிகம எனும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள பாதைகள், சிறிய பாலம், கால்வாய்களுக்கான இறங்கு படிக்கட்டுக்கள் போன்றன தெரிவு செய்யப்பட்டு அதன் அபிவிருத்திப் பணிகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி, இசங்கனிச்சீமை போன்ற கிராமங்கள் முதன்மைப் படுத்தப்பட்டு இன்று அதற்குரிய வேலைகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.