சட்டதிட்டங்களை மீறி மீன்பிடிப்போரின் அனுமதிப்பத்திரங்கள் ரத்தாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலையில் தெரிவிப்பு

0
112

(திருமலை கதிரவன்)

திருமலைமாவட்டத்தில் சட்டதிட்டங்களை மீறிமீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் சட்டதிட்டங்களை தொடர்ந்து மீறினால் அனுமதிப்பத்திரம் இரத்தாகும் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

திருமலைமாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று சனிக்கிழமை திருமலை பட்டணமும் சூழலும் பிரதேசசபை மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திணைக்கள உயர்அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் உட்பட மீனவர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தொழிலை முன்னெடுப்பதன்மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சுருக்குவலைபாவிப்பதற்கு அனுமதிபெற்றமீனவர்கள்மாத்திரம் 7கடல் மைல்களுக்கு அப்பால் தொழில் செய்யவேண்டும்.

காலை 6மணிதொடக்கம் மாலை 6மணிவரை மாத்திரமே தொழிலில் ஈடுபடவேண்டும்.

அங்கிகரிக்கப்படாத வலைகளைபாவித்து மீன்பிடிக்கமுடியாது.

ஒன்றரை அங்குலத்துக்கு மேற்பட்ட வலைகள் மாத்திரமே சுருக்குவலைமீனவர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.