சட்ட விரோதமாக பசுக்கொலை செய்த சந்தேக நபர்கள் கைது. நெடியமடு கொக்கட்டிச்சோலையில் சம்பவம்.

(மோனி) நெடியமடு, கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக கொலை செய்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

இன்று (30) அதிகாலை 2 மணிக்கு அரசடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக வெட்டிய சந்தேக நபர்களே இவ்வாறு கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டு இறைச்சிக்காக வெட்டிய பசு எதிர்வரும் நாட்களில் கன்று தரக்கூடிய நிலையில் இருந்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக அறியமுடிந்தது.