வவுணதீவு மக்களுக்கு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

 

( எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தொழில்வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வௌ்ளிக்கிழமை (29ம் திகதி)வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது கொத்தியாபுலை, வவுணதீவு, நெடியமடு போன்ற கிராமத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் கிராம உத்தியோகத்தர் கோபாலக்கிருஸ்ணன் ஞானம் அறக்கட்டளை திட்ட உத்தியோகத்தர் ஆர்.சாந்தசீலன் வீ.ஹசான் போன்றோர் கலந்துகொண்டனர்.