வைப்பிலிட்ட பணத்தை மீள வழங்கக்கோரிய கவன ஈர்ப்புப் போராட்டம்

பைஷல் இஸ்மாயில் –

அம்பாறையில் அமைந்துள்ள, அரச அங்கீகாரம் பெற்ற நிருவனமாகிய த பினான்ஸ் கூட்டுத்தாபனத்தில் வைப்பிலிட்ட பணத்தை மீள வழங்கக்கோரிய கவன ஈர்ப்புப் போராட்டம், இன்று குறித்த கூட்டுதாபனத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

த பினான்ஸ் கூட்டுத்தாபனத்தில், பண வைப்பிலிட்டவர்களினாலேயே இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன.

அரசாங்கத்தின் மீது, பூரண நம்பிக்கை வைத்து தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அரச அங்கீகாரம் பெற்ற நிருவனமாகிய த பினான்ஸ் கூட்டுத்தாபனத்தில் எங்களது பணத்தை வைப்பிலிட்டோம். குறித்த கூட்டுத்தாபனம் மூடப்பட்டிருப்பதனால் எங்களது பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாங்கள் வைப்பிலிட்ட எங்களது பணத்திதை மீள பெற்றுத்தரக்கோரி அரசாங்கத்தை வழியுறுத்தியே இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அரச அங்கீகாரம் பெற்ற நிதி நிருவனம் என்பதனாலும், அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையினாலுமே எங்களது பணத்தை வைப்பிலிட்டோம். நிதியமைச்சராக இருக்கின்ற பிரமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தினை கவனத்திற்கொண்டு எங்களது பணத்தை மீளப் பெற்றுத்தருவதற்கான உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்று நாங்கள் அவரைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், அம்பாறை மேற்கு பிரதம அமைப்பாளருமான டொக்டர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க, கவன ஈர்ப்பு இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் செய்து, அம்மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

எமது நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இருக்கின்ற படியினால் இப்பிரச்சினையை அவரது கவனத்திற்கு கொண்டுசென்று இதற்கான உடனடித் தீர்வினை மிகவிரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையினை தான் முன்நின்று செய்து தருவதாகவும், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள  வறிய மக்களும், அரச உத்தியோகத்தர்களுமே இதில் பாதிக்கப்பட்டு இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.