ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் கண்ணீருக்கு மத்தியில்

(க.விஜயரெத்தினம்)
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் கண்ணீருக்கு மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.

மாரடைப்பினால் உயிரிழந்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிரதேச சபை உறுப்பினரின் நல்லடக்க நிகழ்வு வெல்லாவெளி 13 ஆம் கொலணியில் அன்னாரின் வீட்டில் திங்கட்கிழமை(25) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.இதன்போது பிரதேசசபை உறுப்பினரின் பூதவுடலுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கொடியை தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆலோசகர் சின்னா மாஸ்டரினால் போற்றப்பட்டு அகவணக்கம், அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ அன்னாரின் பிறந்த மண்ணில் பூதவுடல்,சமய அனுட்டானங்களுடன் புதைக்கப்பட்டது.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினரின் நல்லடக்க நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,ஊடகப்பேச்சாளர் ஆசாத் மௌலானா,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஞானமுத்து கருஸ்ணப்பிள்ளை(வெள்ளிமலை) கோ.கருணாகரன்(ஜனா),த.கலையரசன்,போரதீவுப்பற்று தவிசாளர்,உபதவிசாளர்,உறுப்பினர்கள்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரநிதிகள்,வெல்லாவெளி பிரதேசசெயலாளர்,வலயக்கல்வி பணிப்பாளர்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூக நிறுவனங்களின் பிரநிதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.

இறைபதமடைந்த குறித்த பிரதேசசபை உறுப்பினர் தமது கிராமத்தில் நூலகம் அமைத்து வாசிப்பை ஊக்கப்படுத்தியதுடன் கல்விப்பணியையும் காத்திரமாக முன்னெடுத்து அதிகமான மக்களின் மனங்களில் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.