இலங்கையில் கொரோனா தொற்றுக் காரணமாக பத்தாவது நபர் உயிரிழப்பு

பீ.எம்.றியாத்

கொரோனா வைரஸினால் நெருக்கடியில் சிக்கிய நிலையில், அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை வைத்தியசாலையில் இன்று அதிமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மரணித்த பெண், களுத்துறை – பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்தப் பெண் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமிலிருந்த இரண்டு பெண்களுக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.