மத்திய மாகாணத்தில் எலிக்காய்ச்சலில் இருவர் பலி கடும் எச்சரிக்கையும் வந்தது!

பீ.எம்.றியாத்
நாட்டில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தலைதூக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற்றும் 30 வயது இளைஞர்கள் இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் 12 பேர் வரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மொத்தமாக இதுவரை 24 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இருப்பதாகவும் கண்டி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய தொற்றுறோய் பற்றிய கண்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். குலரத்ன தெரிவித்தார்.