காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் திடீரென உயிரிழப்பு PCR பரிசோதனைக்கு மாதிரி அனுப்பிவைப்பு

0
90

(ஏ.புஹாது)

காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமையினால்
PCR பரிசோதனைக்காக அவரது மாதிரி அனுப்பிவைக்கபட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தெரிவித்துள்ளார்

உயிரிழந்தவரின் சடலம் மிகவும் பாதுகாப்பான முறையில் PCR முடிவு பிற்பகல் வரும் வரை குளிரூட்டியில் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டு முறைப்படி வைக்கபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சுவாசப் பிரச்சினை காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இறந்தவரின் தொண்டையில் இருந்து பொறப்பட்ட மாதிரி PCRபரிசோதனைக்காக மட்டக்களப்பு போனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளதாக அவர் கூறினார்

அந்த அறிக்கை இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்ற பின்னரே உடற்கூற்று பரிசோதனை செய்வது என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் மேலும் தெரிவித்துள்ளார்