மே 24, 25 நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில்….

0
85
  • எம் எப். எம். வாசித்
கொழும்பு, கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டமானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 23-05-2020சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டமானது 26-05-2020 செவ்வாய் கிழமை காலை 5:00 மணி வரை அமுலில் இருக்கும்.
அந்த வகையில்
மே 24, 25 ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு தினங்கள் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
26-05-2020 செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8:00 மணி முதல் காலை 5:00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்
கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தற்பொழுது அமுல்படுத்தப்படும் நடைமுறையானது மீண்டும் 26-05-2020 முதல் மறு அறிவித்தல் வரை அமுலுக்கு வரும். என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை இல: 123
திகதி: 22-05-2020
நேரம்: மு.ப. 10:15