மட்டக்களப்பில் தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியரும் மாணவர்களும் தனிமைப்படுத்தலில்

0
873

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில்  உயர்தர வர்த்தக மாணவர்களுக்கு பிரத்தியேகமாக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர் உட்பட நான்கு மாணவர்களையும் தத்தமது வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் அச்சுதன்  முத்துலிங்கம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஆசிரியர் மட்டக்களப்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் கல்விகற்பிப்பவர் எனவும் ,  மாணவர்கள் அமி்ர்தகழி, தாண்டவன்வெளி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.