கொரோனா தொற்றிலிருந்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு

0
73
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரனையுடன் புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் கொரோனாவில் இருந்து பொதுமக்களையும், உத்தியோகத்தர்களையும் தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக கொரோனா தொற்றிலிருந்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் செல்வி.ஜெ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றில் இருந்து தன்னை தானே எவ்வாறு தற்காத்துக் கொள்வது, கொரோனா தொற்றுக்குள்ளான உத்தியோகத்தர் ஒருவர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இதன்போது வைத்தியர்களினால் தொழிவூட்டப்பட்டதுடன், உத்தியோகத்தர்களுக்கு துண்டுப் பிரசுரங்களும், உடற்தேற்றி குடிநீர் தயாரிப்பதற்கான மூலிகை கலவையும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டமையம் குறிப்பிடத்தக்கது.
இதன் போது உத்தியோகத்தர்களுக்கான உடற்தேற்றி குடிநீர் தயாரிக்கும் மூலிகை கலவை அடங்கிய பொதிகள் வைத்திய அத்தியட்சகரினால் பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.