வைத்தியர் பஸ்மினா அறூஸினால் ஒரு தொகுதி உடல் தேற்றி மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு.

0
85
பைஷல் இஸ்மாயில் –
கொவிட்-19 வைரசினை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆயுர்வேத துறையினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உடல் தேற்றி மருந்துப் பொதிகள் முப்படையினர், சுகாதார சேவையில் பணியாற்றுவோர் மற்றும் அரச, தனியார் துறையினர் என பலருக்கும் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பொதுமக்களின் நலன்கருதி அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் பஸ்மினா அறூஸினால் ஒரு தொகுதி உடல் தேற்றி மருந்துப் பொதிகளை இன்று (20) வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தார்.
இந்த மருந்துப் பொதிகளை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.பீ.எம்.றஜீஸிடம் கையளிப்கதனையும் அருகில் வைத்தியர்களான எஸ்.முகம்மட் றிசாட், எம்.எஸ்.சிஹானா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.