கல்முனையில் வீடு வீடாக சென்று இப்தார் நிகழ்வு

(எம்.எம்.ஜபீர்)
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை இளம் பெண்கள் முஸ்லிம் சங்கத்தினால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்தார் நிகழ்வுகள் முன்னெடுக்க முடியாமையினால் வீடு வீடாக இப்தார் எனும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.

இதற்கமைவாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைவர் ரஹ்மத் மன்சூரின் வழிகாட்டலில்  கல்முனை பிரதேசத்தில் வீட்டு வீடாக சென்று நோன்பு திறப்பதற்கான உணவு வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.