சுமந்திரனிம் கேக்கப்பட்ட இதே கேள்வியை  தலைவர் வே.பிரபாகரனிடம் கேட்டிருந்தால்

திரு சுமந்திரனிம் கேக்கப்பட்ட இதே கேள்வியை  தலைவர் வே.பிரபாகரனிடம் கேட்டிருந்தால் பதில் எவ்வாறு இருந்திருக்கும்
1)ஆயுதப் போராட்டத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
இல்லை
2)ஆயுதப் போராட்டம் தான் உங்கள் இலக்கா?
இல்லை
3)சிங்கள மக்கள் உங்கள் எதிரிகளா?
இல்லை
4)உங்கள் இலக்கு என்ன?
சம உரிமையுடன் வாழ்வது
5)அவ்வாறு எனில் ஏன் ஆயுதம் ஏந்தினீர்கள்?
அகிம்சை ஜனநாயக முறையில் கேட்டுக் கிடைக்காத போது வேறு வழியில்லாது எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது
6)ஆயுதம் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வை அடையமுடியும் என நம்புகீறீர்களா?
இல்லை
7)நீங்கள் சொல்வது பொய்?
இல்லை அவ்வாறெனில் நாங்கள் பேச்சு வார்த்தைக்கோ சமாதான உடன் படிக்கைக்கோ சென்றிருந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது
8)தமிழ் மக்கள் உங்களை நம்புகின்றார்களா?
ஆம் நிச்சயமாக
9)அவ்வாறானால் ஒட்டு மொத்த தமிழர்களும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் தானே?
ஒரு போதும் இல்லை
10)அதை நீங்கள் எவ்வாறு கூறமுடியும் ?
நாங்கள் ஒருபோதும் சிங்களவர்களுக்கெதிராக போராடியது கிடையாது உரிமைக்காகவே போராடுகிறோம்
இங்கே ஒரு சிங்கள ஊடகவியாளர் கேள்வி கேக்கிறார் அளிக்கப்படும் பதில் தெற்கிற்குரியதாகவே இருக்க வேண்டும் அவர் கேக்கும் கேள்வியின் உள் நோக்கம். அதனூடாக அவர்கள் அறிய முட்படுவது என்ன, தெற்கிற்கு என்ன செய்தியை சொல்ல விளைகிறார்கள்  போன்ற பல விடையங்கள் கேள்வியிலே தொக்கி நிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் துணிந்து கலநிலவரங்களை அறிந்து சுயமாக சிந்தித்து செயட்படக்கூடிய ஆற்றல் மிக்கவர்களில்
அன்று தலைவர் பிரபாகரன் தனித்து பலமுடிவுகளை எடுத்து சாதனைகளையும் பல வெற்றிகளையும் கண்டார் (பின்னாளில் பின்னடைவுக்கு காரணம் பலபேருடைய முடிவுகள் அவர் தனித்து எடுத்து வழிகாட்டிய பயணங்கள் தோற்றதாக இல்லை இது சரித்திரம்)
இன்று ஜனநாயக வழியில் துணிச்சலுடன் பல சாதனைகளை புரிந்து  வருபர் சுமந்திரன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை

படித்ததில் பிடித்தது.