மதுபான சாலைகள் மீண்டும் திறப்பு

ஊரடங்கு சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானசாலைகளை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று முதல் மதுபானசாலைகள் திறக்கப்படும் என மதுவரித்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் அனுமதிப்பத்திரம் கொண்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் மதுபானசாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.