உயர்தரத்துக்கு பாடசாலைகளை தெரிவு செய்ய ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்

உயர் கல்வி அமைச்சு

(தாமோதரம் சுதாகரன்)

கடந்த வருடம் (2019)  .பொ.  சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி சித்தி எய்திய மாணவர்கள் அனைவரும் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர் தரத்தில் கல்வி கற்க தாம் விரும்பிய பிரிவுகளை தெரிவு செய்து நாளை முதல் ஒன்லைனில் விண்ணப்பிக்க கல்வியமைச்சு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இதனடிப்படையில் www.info.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உயர் தர வகுப்புகளுக்கு சேர எதிர்பார்த்துள்ள மாணவர்கள் தாம் விரும்பிய பிரிவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒரு விண்ணப்பதாரி 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்பதுடன் அனைத்து விண்ணப்பங்களும் 2020-06-12 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.