இஸ்லாமிய சமய வழிமுறைகளுக்கமைய முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி முன்வர வேண்டும்.

செல்லையா.பேரின்பராசா

கொவிட் நைன்டீன் காரணமாக மரணமடையும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களைஇலங்கையில் நல்லடக்கம் செய்யாமல் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய தகனம்செய்யும் செயற்பாடு முஸ்லிம் மக்களின் மனங்களை காயப்படுத்தும் செயல் மட்டுமன்றி, இஸ்லாமிய சமய வழிமுறைகளுக்கு முணானதாகும். எனவே இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து இஸ்லாமிய சமய வழிமுறைகளுக்கமைய முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி முன்வர வேண்டும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம் நலன் பேனும் அமைப்பின் தலைவர். ஐ.எல்.எம்.பாறூக் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….. இந் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர். முப்படையினர். சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பலர் கொடிய நேயான கொவிட் நைன்டீனில் இருந்து இலங்கைவாழ் மக்களைப் பாதுகாக்க மிகவும் அர்ப்பணிப்புடன் உயிரையும் மதியாமல் சேவையாற்வதையிட்டு நன்றி தெரிவிக்கின்றோம்.

எமது முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் மீது கொண்டகோபதாபங்களை வைத்துக்கொண்டு ஆளும் அரசாங்கம் ஒட்டுமொத்த முல்லிம் மக்களும் பாதிக்கப்படும் தீர்மானங்களை எடுக்கக் கூடாது என்று இத் தருணத்தில் உருக்கமான கோரிக்கையினை முன்வைக்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை.அஃதே நிரந்தர பகைவரும் இல்லை. முஸ்லிம் மக்கள் புனித நேன்பிருந்து நாட்டை மட்டுமன்றி முழு உலகையும் உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோணாவின் பிடியிலிருந்து

யாவரும் மீள வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும் வேளையில் அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கும்,கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான எம். ஏ. சுமந்திரனுக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.