சல்லி கிராமத்தில் 9 அடி நீளமான முதலை இளைஞர்களால் பிடிக்கப்பட்டது.

0
104
கதிரவன்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சல்லி கிராமத்தில் 9 அடி நீளமான முதலை இளைஞர்களால் பிடிக்கப்பட்டது.
சல்லி முத்துமாரியம்மன் கோயில் அருகில் வரும் வாவியில் இருந்து ஊருக்குள் புகுந்த முதலையே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை 2020.05.10 மாலை பிடிக்கப்பட்டது. குறித்த முதலையை இளைஞர்கள் கட்டி வைத்ததுடன் தகவல் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இச்செய்தி எழுதும் வரை வன ஜீவராசிகள் திணைக்களத்தால் முதலை கைப்பற்றப்படவில்லை.
இளைஞர்களால் பிடிக்கப்பட்ட முதலையை பார்வையிடுவதற்கு பிரதேச மக்கள் பெருமளவில் அங்கு கூடினர்