வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது.

0
101

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த போதைப்பொருள் வியாபாரி வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஊரடங்கு தளர்வு நிலையில் பிரதேசத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் 3360 மில்லி கிராம் கஞ்சாவுடன் வியாபாரி கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த போதைப்பொருள் வியாபாரி இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை அனுபவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.