மட்டக்களப்பில் கரைவலை தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் நாகவத்தை மற்றும் தேவபுரம் போன்ற கிராமங்களில் உள்ள கரைவலை தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர்.

கொரோணா வைரஸ் நோய் தொற்று காரணமாக கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சத்தின் காரணமாக தொழிலுக்கு செல்வதில்லை எனவும், அவர்களுக்கு பதிலாக இயந்திரத்தின் உதவியுடன் கரைவலை இழுப்பதனால் செலவு அதிகரித்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

முன்பு போல் மீன் பிடிபடுவதிலும் குறைவு காணப்படுவதாகவும், பிடிபடும் மீன்களுக்கு சரியான விலை நிர்ணயிக்கப்படுவதில்லை எனவும் கரைவலை தொழில் புரியும் மீனவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் மீன்களை ஊருக்குள் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் உள்ளதாகவவும் தெரிவிக்கின்றனர்