கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் இலவச பேரீச்சம்பழம் விநியோகம்

0
114

(நிப்றாஸ் மன்சூர் )

நாட்டில் நிலவும் தொடர் இடர் நிலையினால்  பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழம்  பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் கடந்த புதன்கிழமை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் பீ. எம் சன்ஸீர்  தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் MM நஸீர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு இச் செயற் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

கல்முனை பிராந்தியத்தை தளமாக கொண்டு முற்போக்குடன் பல வினைத்திறன்மிக்க செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்ற கல்முனையன்ஸ் போரமானது நாட்டில் நிலவும் கொவிட்-19 இடர் நிலையிலும் பல கட்ட நிவாரண விநியோகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில் கல்முனையன்ஸ் போரம்  விடுத்த வேண்டுகோளுக்கமைய 6 தொன் பேரிச்சம்பழத்தினை பெஸ்ட் புட் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்.

குறித்த பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் ஊர்களிலும் அவ்வூர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளூடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கின்றன. கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர், கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர்களான எம்.எம் ஜமால்தீன், எஸ்.எல்.எம் பஹ்மி, தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட  முதலாம் மற்றும் இரண்டாம்  கட்ட உலர் உணவுப் பொதி விநியோகத்தினூடாகவும், நிதியாகவும் சுமார் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களை கடந்த மாதம் கல்முனையன்ஸ் போரம் கல்முனை பிராந்தியத்தில் விநியோகித்திருந்த நிலையிலேயே தற்பொழுது இவ் நிவாரணத்தையும் வழங்க போரம் முன்வந்திருப்பதானது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகின்ற விடயமாகும்.