யுகா கலைக்கழகத்தின் கல்விப்பணி

இம்முறை கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி திறமை சித்தியை பெற்ற (9A) மட்டக்களப்பு மேற்கு வலய அரசடித்தீவு விக்னேஸ்வரா பாடசாலை மாணவன் புலேந்திரன் கிறோஜன் அவர்களை பாராட்டியும் அவரின் உயர்தரப்படிப்புக்கு உதவும் முகமாக துவிச்சக்கர வண்டியை யுகா கலைக்கழகத்தினர் வழங்கி வைத்தனர்.

இந்த துவிச்சக்கர வண்டியை அமரத்துவமடைந்த இளையதம்பி சிவமணி அவர்களின் நினைவாக லண்டனின் வதியும் உறவுகளின் நிதியுதவியில் வழங்கப்பட்டது.