மதுபான விற்பனை நிலையங்களுடன் இறைச்சிகடைகளையும் மூடுமாறு அறிவிப்பு.

நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன. பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு  2020 வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான சாலைகள்  இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளை உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள் (ரேஸ் புக்கி), கஷினோ நிலையங்கள், கிளப்புக்கள் ஆகிவற்றை மூடுதல்

2564 ஸ்ரீ பௌத்த வருடமான 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி மற்றும் 08ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வெசாக் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை வெசாக் வைபவத்தை முன்னிட்டு 2020ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

02. இதே போன்று நீரோகிகம பரமலஹாய் சதுட்ட பரம தனயய் என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கம் வெசாக்கை பிரகடனப்படுத்தியுள்ளது.

03. இதனால் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆகிய 3 தினங்களில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும், சிறப்பங்காடி நிலையங்களில் (சுப்பர் மார்க்கெட்) மதுபான விற்பனையை நிறுத்துவதற்கும் இ விலங்குகளை உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள் (ரேஸ் புக்கி) கஷினோ நிலையங்கள் மற்றும் கிளப்புக்களை மூடுவதற்கும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் சிறப்பங்காடி நிலையங்களில் (சுப்பர் மார்க்கெட்) இறைச்சி விற்பனையை நிறத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் அறிவிக்கின்றோம்.