ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கணிணி மயப்படுத்தும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 

(வி.சுகிர்தகுமார்)

அம்பாரை மாவட்டத்தில் முதல் முறையாக பிரதேச செயலக அலுவலக நடவடிக்கைகளை SYSCGAA எனும் கணிணி மயப்படுத்தும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றதுடன் பசுமைப்பூங்கா திறப்பு விழாவும் சௌபாக்கியா வீட்டுத்தோட்டங்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்தா கலந்து கொண்டதுடன் அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க மற்றும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளுக்கு பிரதேச செயலாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மகத்தான வரவேற்பளித்தனர். பின்னர் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் பின்னராக பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலும் பங்கேற்றனர்.

இங்கு உரையாற்றி அமைச்சின் மேலதிக செயலாளர் ளுலளஉபயய எனும் கணிணி மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்தல் தொடர்பிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அமைச்சில் உதவிச் செயலாளராக கடமையாற்றியபோது இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியதனையும் கொரோனா காலகட்டத்தில் அவர் அமைச்சில் ஆற்றிய பங்களிப்பு தொடர்பிலும் ஞாபகமூட்டினார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்தா குறித்த திட்டத்தினூடாக உத்தியோகத்தர்கள் தங்களது பணியை இலகுபடுத்திக் கொள்ள முடியும் எனவும் இத்திட்டம் அம்பாரை மாவட்டத்தில் முதல் முறையாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் அங்குராhப்பணம் செய்வது தொடர்பில் மகிழ்ச்சி அடைவதுடன் அனைவருக்கும் பாராட்டினை தெரிவித்தார். மேலும் மரநடுகை திட்டத்தை பொறுத்தவரையில் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய அடுத்த வருடத்தினுள் நாட்டில் 75 இலட்சம் மரங்கள் நடப்படும் எனவும் உறுதியாக கூறினார்.

இதன் பின்னராக அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் மரக்கன்று நடும் நிகழ்வில் இணைந்து கொண்டார். தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமைப்பூங்காவினையும் திறந்து வைத்தார். பின்னர் சமுர்த்தி சௌபாக்கியா வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்திற்கு அமைய 2580 பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்ததுடன் சௌபாக்கியா வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடமாடும் விற்பனை கூடம் ஒன்றினையும் சமுர்த்தி பயனாளி ஒருவருக்கு வழங்கி வைத்தார்.

நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.