கிழக்கில் சேதன ஆய்வு கூட நிறுவுதல் தொடர்பில் கலந்துரையாடல்

ஹஸ்பர்_
 கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பட்டின் கருத்தின் அடிப்படையில், கந்தளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது ISO 17025 சேதன பசளை உற்பத்தி தர ஆய்வுகூடத்திற்கு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் தலையீட்டுடன் சீனாவின் யுனான் மாகாணம் பூரண ஆதரவை வழங்க இணங்கியுள்ளது.
 அதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (12)  திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் யுனான் மாகாண வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் ஆளுநருமான திரு.மா சு ஷின் தலைமையில் இடம்பெற்றது.
 இக்கலந்துரையாடலில், சேதன பசளை உற்பத்தி தர ஆய்வகத்தின் விதை ஆராய்ச்சிக்கு சர்வதேச நிலைச் சான்றிதழ் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 இவ்வாறான சர்வதேச நிலை சான்றிதழை வழங்கும் ஆய்வு கூடம் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
 யுனான் மாகாண ஆளுநருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் இது தொடர்பான உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 எதிர் வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 உடன்படிக்கையின் பிரகாரம், ஆய்வு கூடத்தின் பணிகள் 02 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக மண், விதை, நீர், உரம் என்பன பரிசோதிக்கப்படும்.
 இரண்டாவது கட்டத்தின் கீழ், சர்வதேச நிலை சான்றிதழைப் பெற மேற்கூறிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
 இதன் போது  கிழக்கு மாகாணத்தின் அடுத்த ஐந்து வருடங்களுக்கான மூலோபாயத் திட்டத்தை கிழக்கு  ஆளுநர் திரு.மா.சு ஷினிடம் வழங்கினார்.
 கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக யுனான் மாகாணத்திலிருந்து முதலீட்டாளர்களை அழைப்பதே இதன் நோக்கமாகும்.
 அதுமட்டுமின்றி சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
 யுனான் மாகாணத்தில் கல்வி, கிராமப்புற தொழில்கள், எரிசக்தி, நகர திட்டமிடல், வணிகம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும்  சீன பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 மேலும்,இதில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முதுபண்டா கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் என  பலர் கலந்துகொண்டனர்.