அழகிப்போடி கருணாகரன் 32வருட அரசசேவையில் இருந்து ஓய்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு கிராமத்தில் பிறந்த அழகிப்போடி கருணாகரன் 32வருட அரச சேவையில் இருந்து நேற்று  ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கை திட்டமிடல் சேவை உத்தியோகத்தரான இவர், உதவி திட்டமிடல் பணிப்பாளராக ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய நிலையிலேயே ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
1990இல் பட்டதாரி பயிலுனராக அரச சேவையில் இணைந்து கொண்ட இவர், திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தராக நிரந்தர நியமனம் பெற்று பின்னர், இலங்கை திட்டமிடல் சேவையில் 1999இல் உள்வாங்கப்பட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
தொடர்ந்து, மண்முனை மேற்கு பிரதேச செயலகம், மாவட்ட திட்டமிடல் செயலகம்,  காத்தான்குடி பிரதேச செயலகம் போன்றவற்றிலும் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
ஆரம்ப இடைநிலை கல்வியை முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கற்ற இவர், உயர்தரக்கல்வியை சிவானந்தா தேசிய பாடசாலையில் பயின்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி பட்டத்தினைப் பெற்ற இவர், முதுமாணி பட்டத்தினை மதுரை காமராஜர் கல்கலைக்கழத்திலும் பெற்றுள்ளார்.
புனர்வாழ்வு கழகத்தில் திட்ட கண்காணிப்பு உத்தியோகத்தராக பேராசிரியர் சிவத்தம்பி தலைவராக இருந்த காலத்தில் இவர் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.